பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா வணங்கான்? குழப்பத்தில் படக்குழு!

வணங்கான் படத்தை ஜனவரி 10 அன்று ரிலீஸ் செய்யலாமா அல்லது வேறு தேதியில் ரிலீஸ் செய்யலாமா என படக்குழு குழப்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Vanangaan And Vidaamuyarchi

சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் விடாமுயற்சி மற்றும் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படம் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. எனவே, இரண்டு படக்குழுவும் தீவிரமான ப்ரோமோஷனில் இறங்கியுள்ளது.

குறிப்பாக, விடாமுயற்சி படத்தில் இருந்து முதல் பாடலான Sawadeeka பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. அதே போல, வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா பாலா 25 விழாவுடன் சேர்ந்து சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த இரண்டு படங்களின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் இரண்டு படங்களையும் மக்கள் கொண்டாடி தீர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், தற்போது வணங்கான் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஏனென்றால், பொங்கல் பண்டிகை அன்று விடாமுயற்சி படம் மட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம்ஜெஞ்சர் படம் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகிறது. தெலுங்கு படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானால் கூட படத்தில் ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

எனவே, இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதன் காரணத்தால் இந்த நேரத்தில் படத்தை வெளியீட்டால் நமக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காது என்பதால் வணங்கான் படக்குழு தங்களுடைய படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்வது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இது குறித்து படக்குழு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்