Vijayakanth கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் அவருடன் படங்களில் பணிபுரிந்த சக நடிகர்கள் அவர் செய்யும் நல்ல விஷயங்களை கண்ணால் பார்த்திருப்பார்கள். அதனை பேட்டிகளில் வெளிப்படையாக கூறி அவரை பற்றி பாராட்டி பேசுவதும் உண்டு. அப்படி தான் விஜயகாந்துடன் பல படங்களில் பணியாற்றிய நடிகர் வாகை சந்திரசேகர் பேட்டி ஒன்றில் விஜயகாந்த் பற்றி உருகி பேசியுள்ளார்.
பேட்டியில் பேசிய நடிகர் வாகை சந்திரசேகர் ” விஜயகாந்த் மாதிரி ஒரு நல்ல மனிதரை யாருமே பார்க்க முடியாது. அவருடன் எனக்கு பல நினைவுகள் இருக்கிறது. நான், விஜயகாந்த், ராதா ரவி என அனைவருமே நெருங்கிய நண்பர்கள். நண்பர்கள் என்றால் பாசமாக பேசிக்கொள்வோம் என அப்படியெல்லாம் இல்லை அடிக்கடி எங்களுக்குள் சண்டை அதிகமாக வரும். விஜயகாந்த் ஒரு முடிவு எடுத்து இது தான் சரி என்று சொல்வார்.
மற்றோரு பக்கம் ராதா ரவி என்னுடைய முடிவு தான் சரி என்று கூறுவார். மற்றோரு பக்கம் நான் என்னுடைய முடிவு சரி என்று கூறுவேன். இதனாலே எங்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வரும் சில நாட்கள் பேசிக்கொள்ளமாட்டோம். அதனை போலவே, ஒரு சில சமயங்களில் எல்லாம் காரணமே இல்லாமல் சண்டைபோட்டுக்கொள்வோம் அழுவோம். இப்படி செய்த காரணத்தால் எங்களை சினிமாவை விட்டு ஒதுக்கி வைத்து இருந்தார்கள்.
அந்த அளவிற்கு நாங்கள் எல்லாம் கலாட்டா செய்துகொண்டு ஜாலியாக இருப்போம். விஜயகாந்த்க்கு நெருக்கமான நண்பர்களில் நானும் ஒருவன். அவர் தன்னுடைய பிரச்சனைகளை மட்டும் தனியாக பார்க்கமாட்டார். மற்றவர்களின் பிரச்சனையும் எடுத்து அதுவும் தன் பிரச்சனை என்பது போல தான் பார்ப்பார். பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பவர்களை தேடி தேடி தன்னுடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார்.
அந்த மாதிரி நல்ல குணம் அவருக்கு மட்டும் தான் இருக்கும். சிறந்த நடிகர் மட்டுமில்லை அவர் ஒரு நல்ல மனிதர்” எனவும் வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும் விஜயகாந்தும் நடிகர் வகை சந்திரசேகரும் சிவப்பு மல்லி, பேரரசு, ஊமை விழிகள், நரசிம்மா உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…