AK 61 திரைப்படத்தின் தலைப்பு இதுதானா..? தீயாய் பரவும் புதிய தகவல்.!
நடிகர் அஜித் தற்போது தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வலிமை படத்திற்கு பிறகு எச்.வினோத் -அஜித் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடிகை மஞ்சு வாரியர், வெற்றி கிரண், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்களேன்- வயசானாலும் உங்க அழகு இன்னும் போகல..தூக்கலான புகைப்படங்களை வெளியீட்டு தூக்கத்தை கெடுத்த சதா.!
படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. வலிமை படத்தை போல இந்த படத்திற்கும் அப்டேட்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் சோகத்துடன் அப்டேட் கேட்டு வருகிறார்கள். இந்த மாதம் இறுதியில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, தற்போது படத்திற்கான தலைப்பு குறித்த ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால், இந்த படத்திற்கு “துணிவே துணை” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.