அருணாச்சலம் பட டைட்டில் முதலில் இதுவா.? சூப்பர் ஸ்டார் கொடுத்த டுவிஸ்ட்…

Default Image

நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி இயக்கத்தில், உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் ஆகிய திரைப்படங்கள் இவருடைய ஹிட் திரைப்படங்களாக அமைந்துள்ளது. அதில் ஒன்றான அருணாச்சலம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

Arunachalam

சுந்தர்.சி இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த அருணாச்சலம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா, மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ரஜினிக்கும் மெகா ஹிட் படமாக அமைந்தது, அப்படிப்பட்ட இப்படத்தின் தலைப்பு எப்படி வந்தது என்று கேட்டால் ஆச்சிரியம் படுவீங்க….

அதாவது, இந்த படத்துக்கு முதலில் ‘அருணாச்சலம்’ என்று தலைப்பு வைக்கவில்லையாம், இயக்குனர் சுந்தர்.சி இந்த படத்துக்கு ‘குபேரன்’ என்று பெயர் வைத்தாராம். இந்த டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்னரே வெளியே கசிந்து மீடியாவிலும் பரவ தொடங்கியது. உடனே, படக்குழுவும் ரஜினியும் வேற ஒரு  டைட்டிலை வைப்பதற்கு முடிவு செய்தனர்.

arunachalam movie

பின்னர், ரஜினிகாந்த் ஒரு நாள் காலை இயக்குனர் சுந்தர்.சி-க்கு கால் செய்து சூப்பர் டைட்டில் ஒன்று யோசித்து வைத்திருக்கிறேன் உடனே வீட்டுக்கு வாங்க என்று சொல்ல, சுந்தர் சி ஆர்வம் தாங்க முடியாமல், வீட்டிற்கு செண்றுள்ளார். அங்கு ரஜினிக்கு வேண்டிய நபர் ஒருவர், சுந்தர் சி எதிரே வரவும் சார்… சூப்பர் டைட்டில் சார் என்று சொல்லிருக்கிறார்.

என்னனு நீங்க சொல்லுங்க என்று சுந்தர் சி கேட்க அவரும் அருணாச்சலம் என்று சொல்லியிருக்கிறார். உடனே, சுந்தர் சி அப்செட் ஆகி இது என்ன சார் டைட்டில், அருணாச்சலம்…வேதாசலம்மனு சொல்றீங்க.. நல்ல டைட்டிலா வைக்கணும். அப்படினு சொல்லிட்டு ரஜினியிடம் செல்ல… அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி அவரது ஸ்டைலில்…”அருணாச்சலம்”… என்று சொல்லியிருக்கிறார்.

rajinikanth

உடனே, சுந்தர் சி சார் சூப்பர்..ஆ.. இருக்கு சார்னு சொல்லி ஓகே செய்தார்களாம். இந்த செய்தியை இயக்குனர் சுந்தர் சி ஒரு தனியார் நேர்காணல் ஒன்றிக்கு பேட்டி அளித்திருப்பார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்