விடாமுயற்சி படத்தின் கதை இதுதானா.! அதுக்கு ஏன் இவ்வளவு சீனு?

Vidaa Muyarchi

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் ரெஜினா, த்ரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருவதாக கூறப்படுகிறது.

டத்தில் அஜித் நடிக்கிறார் படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை லைக்கா தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவலை தவிற வேறு எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இருந்தாலும் நம்ப தக்க சினிமா வட்டாரத்தில் இருந்து படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்தும் படம் குறித்தும் அப்டேட்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. அஜித் ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்திற்கான அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், இந்த படத்தின் கதை என்ன வென்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் அஜித் மற்றும் த்ரிஷாவும் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. படத்தில் கணவன் மனைவியாக நடிக்கும் திரிஷா மற்றும் அஜித் வெளிநாட்டிற்கு சுற்றுலாவுக்கு செல்லும் பொழுது, த்ரிஷா வழி தவறி காணாமல் செல்வதாகவும் பின், இருவர்களும் தேடுவது போல் கதை நகரும் நகர்கிறது.

முடிந்தது ‘விடாமுயற்சி’ ஷூட்டிங்? திடீரென சென்னை திரும்பிய அஜித் குமார்! ஏன் தெரியுமா?

இப்படி இருக்கையில், த்ரிஷா ஒரு கட்டத்தில் எதிரிகளிடம் சிக்கிக் கொள்கிறார் என்றும் பின்னர், எதிகளிடம் இருந்து த்ரிஷாவை கண்டுபிடித்து மீட்பது தான் படத்தின் கதை என்று சினிமா செய்திகளை வழங்கும் வலைப்பேச்சு ஊடகம் இந்த தகவலை பகிர்ந்துள்ளது. இந்த கதை வழக்கம்போல் இருக்கும், பழைய படங்களில் இடம்பெற்றிருக்கும் கதைகளை வைத்து எடுக்கப்படுவதாக தெரிகிறது. இருந்தாலும் இயக்குனர் சற்று வித்தியாசமாக செய்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்