மீண்டும் இணையும் இரு ஒல்லி நடிகர்கள் காரணம் இதுவா ?
சினிமாவில் இவர்கள் இணைந்தால் அந்த படம் சூப்பராக இருக்கும் என்ற எண்ணம் ரசிகர்களிடம் உள்ளது. அப்படி இசையில் சொல்லப்போனால் கௌதம் மேனன்-ஏ.ஆர்.ரகுமான், சூர்யா-ஹாரிஸ் ஜெயராஜ், சிம்பு-யுவன் அடுத்து கூற வேண்டுமானால் அனிருத்-தனுஷ்.
DnA என்று செல்லமாக ரசிகர்களால் அனிருத்-தனுஷ் கூட்டணி கூறப்பட்டு வந்தது. ஆனால் இவர்கள் சில வருடங்களாக எந்த படத்திலும் கூட்டணி அமைக்கவே இல்லை, இதனால் ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் அனிருத் தன்னுடைய சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அடுத்த வருடத்தில் (2019) கண்டிப்பாக DnA கூட்டணி அமைய இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த தகவல் அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.