அவசர அவசரமாக ‘குட் பேட் அக்லி’ போஸ்டர் வெளியிட இது தான் காரணமா?

good bad ugly ajith

சென்னை : குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவாக வெளியான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆதிக்ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் தான் ‘குட் பேட் அக்லி’. இந்த படத்திற்கு முன்னதாகவே, அஜித் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருந்தார். ஆனால், இந்த படத்திற்கு முன்னதாகவே, குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிவிட்டது.

குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மொத்தம் மூன்று அஜித் இருந்தனர். பர்ஸ்ட் லூக் போஸ்டர் ஒரு பக்கம் நல்ல விமர்சனத்தையும், ஒரு பக்கம் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இதனையடுத்து அவசர அவசரமாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட அஜித் தான் காரணமாம்.

படத்தின் படப்பிடிப்பை மே 10-ஆம் தேதி தொடங்க படக்குழு திட்டமிட்டு இருந்ததாம். திடீரென்று, 700 தொழிலாளர்கள் சரியான நேரத்தில் செட் வேலையைச் செய்து முடித்துள்ளனர். பிறகு, தொழிலாளர்கள் அஜித்குமாருடன் செல்ஃபி எடுத்தார்களாம். அப்போதே இந்த படத்தில் அஜித்தின் லுக் கசிந்துவிட்டதாம்.

உடனடியாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரெடி செய்து வெளியிட அஜித் படக்குழுவினரிடம் கூறினாராம். இதன் காரணமாக தான் படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் விரைவாகவே வெளியானதாம். மேலும், குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்