நாடாளுமன்ற தேர்தலால் ராயன் படத்துக்கு வந்த சிக்கல்?
ராயன் : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்ல நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தான் காரணம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகர் தனுஷின் 50-வது படமான ராயன் வரும் ஜூன் மாதம் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்லவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த படத்தில் சில காட்சிகள் தனுஷ் நினைத்தபடி சரியாக வரவில்லை என்றும், அந்த காட்சிகளை மட்டும் மீண்டும் ரீ ஷூட் செய்வதற்கு நடிகர் தனுஷ் திட்டமிட்டு இருப்பதாகவும், இதன் காரணமாக தான் ராயன் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டு படம் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவலால் பரவியது.
ஆனால், ராயன் படத்தை தள்ளி வைக்க அது காரணமே இல்லயாம். சமீபத்தில் லேட்டஸ்ட் ஆக கிடைத்த தகவலின் படி, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியாகிறது என்பது தான் ராயன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்ல காரணமாம். ஏனென்றால், ராயன் படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பெரிய அளவில் செலவு செய்து எடுத்து இருக்கிறதாம்.
எனவே, இன்னும் பணம் செலவு செய்து படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். ஜூன் 4-ஆம் தேதி தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகிறது இந்த சூழலில் படத்தை எவ்வளவு செலவு செய்து ப்ரோமோஷன் செய்தாலும் தேர்தல் பரபரப்பில் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காதாம்.
எனவே, இதனை கருத்தில் கொண்டு படத்தை ஜூன் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யவேண்டாம் சற்று தாமதமாக நன்றாக விளம்பரம் செய்து வெளியிடலாம் என சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறதாம். இந்த தகவல் சினிமா தகவல்களை தெரிவிக்கும் யூடியூப் சேனலான வலைப்பேச்சியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உண்மையில் படம் பரவும் வதந்தி தகவலை போல தாமதமாக ரிலீஸ் ஆகுமா? அல்லது திட்டமிட்டபடி வரும் ஜூன்13-ஆம் தேதி வெளியாகிறதா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும், இந்த ராயன் படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, நித்யா மேனன், செல்வராகவன், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.