அழகு குட்டி செல்லம்…நடிகை பிரியங்கா சோப்ராவின் மகளா இது..? வைரலாகும் புகைப்படங்கள்.!
முதல்முறையாக வெளியான பிரியங்கா சோப்ராவின் மகள் மால்டி மேரியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை பிரியங்கா சோப்ரா நிக் ஜோனாஸ் என்பவரை கடந்த 2018-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வாடகை தாய்முறையில் பெண் குழந்தை பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், பிரியங்கா சோப்ரா இதுவரை தன்னுடைய குழந்தையின் முகத்தை காட்டாமல் இருந்த நிலையில், தற்போது நடிகை பிரியங்கா சோப்ரா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் மத்தியில் தனது மகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
#NickJonas #PriyankaChopra #LatestNews pic.twitter.com/Z0V0y4MCH6
— CineBloopers (@CineBloopers) January 31, 2023
தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் பிரியங்கா சோப்ராவின் குழந்தை வெள்ளையாக மிகவும் க்யூட்டாக இருப்பதால் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அழகு குட்டி செல்லம் எனவும் அம்மாவைப்போல குழந்தையும் அழகா இருக்காங்க என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ‘லவ் அகைன்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.