நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதியின் குழந்தையா இது..? வைரலாகும் புகைப்படம்.!
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தங்களுடைய பெற்றோர்கள் முன்னிலையில், திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் ஆனதை தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் வாடகை தாய் மூலம் 2 குழந்தைகளைப் பெற்று கொண்டார்கள்.
2 குழந்தைகளைப் பெற்று கொண்டதை விக்னேஷ் சிவனே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை குழந்தைகளின் முகத்தை மக்களுக்கு காமிக்கவே இல்லை. ஏதேனும் பண்டிகைகள் வந்தால் கூட குழந்தைகளின் முகத்தை மறைத்து வைத்து கொண்டே புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் எடுத்து கொண்ட பழைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் நயன்தாரா கையில் குழந்தை ஒன்றும் இருக்கிறது. எனவே, இந்தபழைய புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இது தான் நயன்தாராவின் குழந்தை என்றும் இது லேட்டஸ்ட் பபுகைப்படம் என்றும் தகவலை பரப்பி வருகிறார்கள்.
உண்மை என்னவென்றால், இது நயன்தாரா கடந்த 2021-ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம் அவர் கையில் வைத்திருக்கும் குழந்தையும் அவருடைய குழந்தை இல்லை. அவருடைய உறவினர் ஒருவருடைய குழந்தை தான் என்று கூறப்படுகிறது. மேலும் நயன்தாரா தற்போது இறைவன், ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.