உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். மேலும், 17-வது போட்டியாளராக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளே அவர் மற்ற போட்டியாளர்களிடம் கேள்வி கேட்க துவங்கினார். இதனால், இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வந்துள்ளாரா? அல்லது போட்டியாளராக வந்துள்ளாரா என தெரியாமல் இருந்த நிலையில், தற்போது இவர் புதிய போட்டியாளர் தான் என்பது உறுதியாகியுள்ள நிலையில், மற்ற போட்டியாளர்களும் இவரை கலாய்க்க துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று சமையல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சேரன், ஷெரின், மதுமிதா இவர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஷெரின் ஆண்கள் அணியிலும், சேரன் பெண்கள் அணியிலும் இருந்தனர். இவர்களுக்கு நடுவராக மதுமிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் போட்டியின் முடிவோ மாறுதலாய் முடிந்துள்ளது. தர்சனின் அணியோ மிகவும் அருமையாக சர்க்கரை பொங்கல் செய்திருந்தனர். கஸ்தூரி அணியோ பொங்களில் கடலைப்பருப்பை கொட்டி, வேகாத பிரைடு ரைஸ் மாதிரி செய்துள்ளார். மேலும், இவர் பொங்கலில் அரிசியை கழுவாமல் போட்டுள்ளார். இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…