அடடா..நடிகை கீர்த்தி சுரேஷா இது..? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!
நடிகை கீர்த்தி சுரேஷ் அடிக்கடி வெளியே எங்கயாவது சென்றாலோ அல்லது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வருகை தந்தாலோ அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி ட்ரெண்ட் ஆகிவிடும். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவர் மர்டன் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலானது.
@KeerthyOfficial #KeerthySuresh #Dasara pic.twitter.com/Pc9zrepnGr
— CineBloopers (@CineBloopers) March 12, 2023
அதனை தொடர்ந்து, தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தான் நடித்துமுடித்துள்ள “தசரா” திரைப்படத்தினை ப்ரோமோஷன் செய்வதற்காக அட்டகாசமான கருப்பு நிற சேலை அணிந்துகொண்டு விழா ஒன்றிற்கு வருகை தந்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மிகவும் அழகான தோற்றத்தில் இருப்பதால் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அழகோ அழகு என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நானிக்கு ஜோடியாக தசரா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம். கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலரும் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.