புஷ்பா 2 ரிலீஸ்க்கு முன்பு இப்படி ஒரு பிரச்சனையா? அப்செட்டான ரசிகர்கள்!
புஷ்பா 2: தி ரூல் டிசம்பர் 5 ஆம் தேதி 3D இல் வெளியிடப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : டிசம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் புஷ்பா 2 படத்தின் அட்வான்ஸ் புக்கிங் அமோகமாக நடைபெற்று வரும் சூழலில், ரசிகர்களுக்கு அப்செட் ஆக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், தயாரிப்பாளர்கள் படம் 2D, 3D, 4DX மற்றும் IMAX உட்பட பல வடிவங்களில் வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது 3D பிரிண்ட் பதிப்பு தயாராக இல்லை என்பதால் 3D-யில் வெளியாகாது என தகவல்கள் வந்துள்ளது.
புஷ்பா 2 திரைப்படம் காட்டிற்குள் நடக்கும் கதையம்சம் கொண்ட படமாக எடுக்கப்பட்ட காரணத்தால் 3D பதிப்பில் படம் பார்த்தால் நன்றாக இருக்கும் என பலரும் யோசித்துக்கொண்டிருந்த நிலையில் ஆசையை காட்டி மோசம் செய்த வகையில் D-யில் வெளியாகாது என வெளியான இந்த தகவல் ரசிகர்களை கடுமையாக அப்செட் ஆக்கியுள்ளது.
எனவே, படத்தை 3டி பதிப்பை முன்பதிவு செய்த பல ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இப்போது, குழு நிகழ்ச்சிகளை ரத்து செய்ததால் டிக்கெட் புக்கிங் காசை திரும்பவும் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.ஆனாலும், இதற்கிடையில், தயாரிப்பாளர்கள் 3D பதிப்பை வரும் நாட்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவலும் வெளிவந்த வண்ணம் உள்ளது.
அதன்படி, புஷ்பா 2 இன் 3டி பதிப்பு டிசம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வரும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய தேதி அவர்களுக்கு 3D பிரிண்ட் சரியான முறையில் தயார் செய்து கொடுக்க போதுமான நாளாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இன்னும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் எனவும் கூறப்படுகிறது.