சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் சூர்யா நடித்து வரும் கங்குவா படமும், ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படங்களும் உள்ளது. இதில் கங்குவா படம் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே, அறிவிக்கப்பட்டுவிட்டது. அதே சமயம் வேட்டையன் படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று மட்டும் படக்குழு அறிவித்து இருந்தது.
ரிலீஸ் தேதி என்னவென்று அறிவிக்கப்படாத நிலையில், வேட்டையன் படம் தீபாவளிக்கு வெளியாகுமா? அல்லது கங்குவா படத்துடன் மோதுமா? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்தது. இதனையடுத்து, படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே, கங்குவா படமும் அதே தேதியில் வெளியாகவுள்ள காரணத்தால் இரண்டு படங்களில் எந்த படம் அதிக அளவு வசூல் செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போவே எழுந்துள்ளது. இரண்டு படங்களின் மீதும் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருப்பதன் காரணமாக பூஜை விடுமுறையை டார்கெட் செய்து ரிலீஸ் செய்ய இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
மேலும், கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா முன்னதாக பேட்டி ஒன்றில் பேசும்போது ” வேட்டையன் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் , நாங்கள் ரஜினி படத்துடன் போட்டி போடவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் வேட்டையன் ரிலீஸ் தேதி அக்டோபர் 10 என அறிவிக்கப்பட்டுள்ளதால் கங்குவா ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…