பிகில் படம் இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதா? பிகில் போஸ்டரை கிழித்தெறிந்த வியாபாரிகள்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், கோவை உக்கடம் புதிய மீன்மார்க்கெட் பகுதியை சேர்ந்த வியாபாரியான கோபால், பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவர் கையில் வைத்திருந்த பிகில் போஸ்டரை ஆக்ரோஷமாக கிழித்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கோபால் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில், மீன், கறிக்கோழி, ஆட்டு இறைச்சி போன்றவற்றை வெட்டும் கட்டை மற்றும் கத்தி மீது நடிகர் விஜய் செருப்பு அணிந்த காலை அதன்மீது வைத்திருப்பதாகவும், இறைச்சி வியாபாரிகளை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ள இந்த சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025