பிரசாந்த் : 90’ஸ் காலத்தில் பெண் ரசிகைகளின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகர் பிரசாந்த். அந்த காலத்தில் இருந்து இப்போது வரை ஆணழகன் என்ற பெயருக்கும் சொந்த காரர் என்றே சொல்லலாம். இவர் தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் நடிக்க வந்து அந்தகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தை பார்க்க தான் டாப் ஸ்டார் பிரசாந்த் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இந்நிலையில், பிரசாந்த் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு மருத்துவராக வேண்டும் என்பது தான் மிகப்பெரிய ஆசையாக இருந்ததாம். ஆனால், சில காரணங்களால் சினிமாவிற்குள் வந்து அப்படியே நடிகராகிவிட்டாராம்.
அவர் நடித்த முதல் திரைப்படமான வைகாசி பொறந்தாச்சு படத்தில்நடிப்பதற்கு முன்னதாக அவருடைய தந்தையும், இயக்குனருமான தியாகராஜன் பிரசாந்தை அழைத்து மீட்டிங் ஒன்று நடத்தினாராம். இப்போது நீ இந்த படத்தில் நடிக்க தொடங்கப்போகிறாய் நீ நடித்துவிட்டு வா பிறகு என்ன முடிவு என்பதை பார்ப்போம் என்று கூறினாராம்.
அந்த சமயமே வைகாசி பொறந்தாச்சு படம் ஹிட் ஆனால் தொடர்ச்சியாக நீங்கள் நடிங்கள் அப்படி படம் ஹிட் ஆகவில்லை என்றால் நீங்கள் மருத்துவருக்கு படிங்கள் என்று பிரசாந்த் தந்தை கூறிவிட்டாராம். அதற்கு படம் ஹிட் ஆனால் ஆக்டர் இல்லை என்றால் டாக்டர் இந்த வயதில் இந்த இரண்டு வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது என பிரசாந்த் யோசித்துக்கொண்டு சினிமா வாய்ப்பை பயன்படுத்தி கொண்டாராம்.
அந்த படமும் மிகப்பெரிய ஹிட் ஆகி தொடர்ச்சியாக பிரசாத்துக்கு பட வாய்ப்புகள் வந்ததாம். பட வாய்ப்புகள் அனைத்தையும் நன்றாக பயன்படுத்த முன்னணி நடிகராகவும் வளர்ந்துவிட்டாராம். இதெல்லத்திற்கும் காரணம் கடவுள் அருள் தான் அவரால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்கிறார் பிரசாந்த்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…