ஷாருக்கானின் ‘ஜவான்’ விஜயகாந்த் பட காப்பியா? அட்லீ மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்.!
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி ‘ஜவான்’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் கதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘பேரரசு’ படத்துடைய கதை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பான புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான ” பேரரசு” திரைப்படத்தை ரோஜா காம்பைன்ஸ் என்ற நிறுவனம் தான் தயாரித்திருந்தது. மாணிக்கம் நாராயணன் என்பவர் அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி செய்திருந்தாராம். மேலும். இப்போது ரோஜா காம்பைன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் மரணமடைந்துவிட்டார்.
எனவே, அதனால் அவரின் பட உரிமைகள் அனைத்தும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணத்திடம் உள்ளது. இதனையடுத்து, அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் “ஜவான் “திரைப்படம் “பேரரசு” திரைப்படத்தின் கதையை தழுவி எடுக்கப்படுகிறதாக தயாரிப்பாளர் சங்கத்தில் மாணிக்கம் நாராயணன் புகார் கொடுத்துள்ளார். மேலும் அவர் கொடுத்த அந்த புகார் மீதான விசாரணை வரும் 9-ஆம் தேதிக்கு மேல் நடத்த தயாரிப்பு சங்க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி பட கதை மணிரத்னம் இயக்கிய மௌன ராகம் பட கதை காப்பி என்றும், விஜய் நடித்த தெறி திரைப்பட கதை விஜயகாந்தின் சத்ரியன் பட காப்பி என்றும், விஜயின் மெர்சல் திரைப்பட கதையும் கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி என்றும் சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.