இசையமைப்பாளர் டி.இமான் இவ்வளவு நல்ல மனிதரா? குட்டி பத்மினி சொன்ன தகவலை கேட்டு கண்கலங்கும் ரசிகர்கள்!
இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் இனிமேல் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு திரைப்படம் கூட பணியாற்றமாட்டேன் என தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார். இதனை பார்த்த பலரும் இருவரும் அண்ணன் -தம்பி போல பழகி வந்தவர்கள் இருவருக்கும் இடையே திடீரென என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பி வந்தனர். ஒரு பக்கம் டி.இமான் விவாகரத்து பற்றி தான் சிவகார்த்திகேயனுக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுத்தி இருக்கும் என கூறிவந்தனர்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில், இசையமைப்பாளர் டி.இமானின் முதல் மனைவி மோனிகா பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனிதர் நானும் இமானும் பிரிய கூடாது என்று அவர் விரும்பினார். உண்மையில் சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனிதர் டி.இமான் பட வாய்ப்புகள் இப்போது இல்லாத காரணத்தால் இமான் சிவகார்த்திகேயன் பற்றி இப்படி சொல்லிக்கொண்டு இருக்கிறார் எனவும் தெரிவித்து இருந்தார்.
இந்த ஜென்மத்துல சிவகார்த்திகேயனுடன் படம் பண்ணவே மாட்டேன்! இசையமைப்பாளர் டி.இமான் பரபரப்பு!
எனவே, இமான் விவாகரத்து விஷயத்தில் தான் சிவகார்த்திகேயனுக்கும் பிரச்சனை ஏற்பட்டது தெரிய வந்தது. இமானும் இதனை வெளிப்படையாக சொல்லாமல் சிவகார்த்திகேயன் துரோகம் செய்ததாகவும், அதனை வெளிப்படையாக கூறமுடியாது எனவும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நடிகை குட்டி பத்மினி பேட்டி ஒன்றில் இமானை மோனிகா சரியாக புரிந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” இமான் – மோனிகா இருவரும் விவாகரத்து செய்துகொண்ட பிறகு இமான் என்னிடம் எனக்கு திருமணம் ஆகாத பெண் வேண்டாம். ஒரு பெண் குழந்தையோடு இருக்கும் பெண் தான் எனக்கு வேணும் நான் அவரை திருமணம் செய்துகொள்வேன். அந்த மாதிரி எதாவது பெண் இருந்தால் சொல்லுங்கள் ஏனென்றால், எனக்கு இரண்டு பெண் குழந்தைகளாக நான் பார்க்க போகிறேன்.
அண்ணா தெரியாம பண்ணிட்டேன்! இமானுக்கு கால் செய்து கெஞ்சிய சிவகார்த்திகேயன்?
எனக்கு 2 பெண் குழந்தைகள் இரண்டு கண்கள் மாதிரி நான் தனியாக இருப்பதால் தனிமையாக இருப்பதாக உணர்கிறேன். வீட்டில் குழந்தைகள் சத்தம் எதுவும் கேட்கவில்லை என்பதால் எனக்கு ஒரு மாதிரி இருக்கு. எனவே, எனக்கு பெண் குழந்தை கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என இமான் கூறினாராம். அது மட்டுமின்றி சம்பாதிக்கும் சொத்தில் 3 பெண் குழந்தைகளுக்கும் பிரித்து கொடுக்கவும் முடிவு எடுத்துள்ளாராம்.
மேலும், இமானை மோனிகா சரியாக புரிந்துகொள்ளாமல் போய்விட்டாரோ எனவும் குட்டி பத்மினி தெரிவித்து இருக்கிறார். மேலும் இமான் கடந்த 2008-ஆம் ஆண்டு மோனிகாவை திருமணம் செய்துகொண்டார். பிறகு கடந்த 2021 ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பிறகு கடந்த 2022 -ஆம் ஆண்டு மே மாதம் அமேலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.