என்னங்க சொல்றீங்க? ‘கோட்’ படத்தில் நடிக்க மீனாட்சி சௌத்ரிக்கு இவ்வளவு தான் சம்பளமா?

சென்னை : கோட் படத்தில் நடிக்க நடிகை மீனாட்சி சௌத்ரி 40 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சினிமா துறையில் நுழைந்த பல நடிகைகளுக்குப் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு உடனே கிடைத்துவிடுவது இல்லை. ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே அந்த அதிர்ஷ்டமான வாய்ப்புகள் கிடைப்பது உண்டு. அப்படி தான், சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான மீனாட்சி சௌத்ரிக்கு தேடி வந்த லட்டு வாய்ப்பாக விஜய்க்கு ஜோடியாகக் கோட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
படத்தில் அவருக்கும் விஜய்க்கு ஜோடிப் பொருத்தம் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சொல்கிறது. ஏற்கனவே, படத்திலிருந்து வெளியான ஸ்பார்க் பாடலில் இருவரும் நடனம் செய்த காட்சிகளும் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. கண்டிப்பாக, படத்தில் மீனாட்சி சௌத்ரி கதாபாத்திரமும் பேசப்படும் வகையில், இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், மொத்தமாக 333 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக மீனாட்சி சௌத்ரி வாங்கிய சம்பளம் குறித்த விவரம் பற்றிய தகவல் இணையத்தில் கசிந்திருந்தது. அதன்படி, படத்தில் நடிக்கச் சம்பளமாக மீனாட்சி சௌத்ரி 40 லட்சம் மட்டுமே வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இவ்வளவு பெரிய படத்தில் நடிக்க மீனாட்சி சௌத்ரிக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட இரண்டு காரணங்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஒரு காரணம் என்னவென்றால், மீனாட்சி சௌத்ரிக்கு தமிழில் பெரிதாக மார்க்கெட் இல்லை, மற்றொரு காரணம் என்னவென்றால், படத்தில் அவருடைய கதாபாத்திரம் குறைவான காட்சிகள் மட்டுமே இடம்பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு காரணங்களுக்காகத் தான் அவருக்குக் குறைவான சம்பளம் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025