லியோ படம் LCU தான்? விமர்சனத்தை கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

uthayanithi stalin about leo

லியோ திரைப்படத்தை பார்த்துவிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

லியோ 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் “லியோ”. இந்த திரைப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், கெளதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

வெளியீடு 

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த திரைப்படம் நாளை அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை வைத்து பார்க்கையில் படம் கண்டிப்பாக உலகம் முழுவதும் முதல் நாளிலே வசூலில் சாதனைகள் படைக்கும் என தெரிகிறது.

LCU? 

இந்த லியோ படத்திற்கு இரண்டு வகையில் எதிர்பார்ப்பு உள்ளது ஒன்று என்னவென்றால், விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள். மற்றோன்று என்னவென்றால் படம் LCU-வில் வருகிறதா? இல்லையா? என்பது தான். இதனை சஸ்பென்ஸாகவே லோகேஷ் வைத்திருக்கிறார்.

படம் குறித்து உதயநிதி 

இந்நிலையில், லியோ திரைப்படத்தை பார்த்துவிட்டு பிரபலங்கள் பலரும் தங்களுடைய விமர்சனங்களை கூறிவருகிறார்கள். குறிப்பாக அனிருத் கூட படத்தை பார்த்துவிட்டு படம் பிளாக் பஸ்டர் என்று கூறி இருந்தார். அவரை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.

படத்தை பார்த்துவிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” விஜய் அண்ணாவின் லியோ திரைப்படத்தை பார்த்தேன். படம் அருமையாக இருக்கிறது. அனிருத்துடைய இசை நன்றாக இருக்கிறது. “LCU ” என சூசகமாக குறியீடு கொடுத்துவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

லியோ வெற்றிபெற ஆண்டவனை வேண்டுகிறேன்! நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

படம் LCU-வா இல்லையா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், தற்போது இதன் மூலம் படம் கிட்டத்தட்ட LCU தான் என்பது உறுதியாகியுள்ளது. வழக்கமாகவே நல்ல படங்களை பார்த்துவிட்டு வெளிப்படையாகவே உதயநிதி தன்னுடைய விமர்சனங்களை கூறிவிடுவார். எனவே அவரே லியோ படத்தை பார்த்துவிட்டு படம் அருமையாக இருப்பதாக கூறியுள்ளது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்