முதல் படத்தில் இப்படியா..? அந்த மாதிரி காட்சியில் நடித்த அனிகா.! ட்ரைலரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!
ஹீரோயினாக அறிமுகமான அனிகா
தமிழில் விஸ்வாசம், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் அனிகா சுரேந்தர். இவர் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமராக புகைப்படங்கள் வெளியிடுவதன் மூலம் இன்னும் பிரபலமானார் என்றே கூறலாம்.
இவர் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள ‘ஓ மை டார்லிங்’ எனும் படத்தில் நடித்ததன் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை அன்சார் ஷா என்பவர் இயக்கியுள்ளார். மெல்வின் ஜி பாபு, முகேஷ், லீனா, ஜானி ஆண்டனி, மஞ்சு பிள்ளை, விஜய ராகவன், நந்து, அர்ச்சனா மேனன், ஃபுக்ரு, டெயின் டேவிஸ், ரிது, மனோஜ் ஸ்ரீகாந்தா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் வரும் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஓ மை டார்லிங் டிரைலர்
#OhMyDarling trailer is out now…
Anikha ♥️#DreamBigFilms release all over Kerala…https://t.co/Un79BtFXPv— AB George (@AbGeorge_) February 8, 2023
ஓ மை டார்லிங் திரைப்படத்தை ட்ரைலர் நேற்று வெளியானது. ட்ரைலரை பார்க்கையில் காதல் கதையை வைத்து படம் உருவாக்கப்பட்டது என்று தெரிகிறது. ட்ரைலரில் வரும் வசனங்களும், காட்சிகளும் புதிதாக இருக்கிறது. அனிகாவின் நடிப்பும் முதல் படத்தில் நடிப்பது போல இல்லாமல் மிகவும் எதார்த்தமாக இருந்தது.
டிரைலரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
#ohmydarling pic.twitter.com/kJoJuxw4l8
— SaiNath.Mu???????? (@SaiPrathi4) February 8, 2023
மேலும் நடிகை அனிகா ட்ரைலரில் சில முத்தக்காட்சிகளும், நெருக்கமான காட்சிகளிலும் நடித்துள்ளார். எனவே இதனை பார்த்த அவருடைய ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள். மேலும் சில நெட்டிசன்கள், முதல் படத்திலே இப்படி நெருக்கமான முத்த கட்சிகளோ..? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.