இவர் ஸ்ரீதேவி தானோ? என வியக்கும் வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்காக உருவாக்கப்பட்டுள்ள மெழுகு சிலை!
தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த திரையுலக பிரபலங்களில் நடிகை ஸ்ரீதேவியும் ஒருவர். தமிழில் பல திரைப்படங்களில், முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார். பின் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்த பின், ஹிந்தி திரையுலகிலும் பிரபலமானார்.
இந்நிலையில், கடந்த வருடம், துபாய் சென்றிருந்த போது அவர் தண்ணீரில் மூழ்கி மரணமடைந்தார். இந்நிலையில், சிங்காப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம், சில முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் பிரபலங்களுக்கு மெழுகு சிலைகளை வடித்துள்ளது. இந்த சிலையை பார்க்கும் போது, ஆச்சு அசலாக ஒருவரை நேரில் பார்ப்பது போன்று இருக்கும்.
அந்த வகையில் மறைந்த நடிகை ஸ்ரீ தேவிக்கும் இந்த அருங்காட்சியகம் மெழுகு சிலையை வடித்துள்ளது. இதனை ஸ்ரீதேவியின் 56-வது பிறந்தநாளை முன்னிட்டு நிறுவ உள்ளது. இதனையடுத்து, போனி கபூர் இவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனம் நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, குயின் எலிசபெத்2, பாராக் ஒபாமா, அமிதாப்பச்சன், ஜாக்கிசான், டெண்டுகர், ஐஸ்வர்யா ராய், மைக்கேல் ஜாக்சன் என பலருக்கு இவ்வாறு மெழுகு சிலையை வடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.