பொண்ணுங்கள அறையும் குறையுமா ஆட விடுவது தான் ‘பிக் பாஸ்’ ? வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட கூல் சுரேஸ்!

bigg boss tamil 7 cool suresh

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை கூல் சுரேஷ் கலந்து கொண்டுள்ளார்.  திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் மற்ற படங்கள் வெளியாகும் போது அதனை பார்த்துவிட்டு திரையரங்கு வாசலில் நின்று கொண்டு வெந்து தணிந்தது காடு வணக்கத்தை போடு என்ற வசனத்தை பேசினார். இவர் பேசியதை ஊடகங்கள் யூடியூபில் வெளியிட இவரை பலரும் தங்களுடைய ப்ரோமோஷனுக்காக அழைத்து கொண்டார்கள்.

கூல் சுரேஷ் பேசுவது சிலருக்கு நகைச்சுவையாக இருந்தாலும் ஒரு சிலருக்கு எரிச்சலையும் உண்டாக்கியுள்ளது என்றே சொல்லலாம். குறிப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சரக்கு எனும் திரைப்படத்தின்  ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தொகுப்பாளினிக்கு மாலை போட்டார்.

இப்படி பொது மேடையில் கூல் சுரேஷ் செய்தது பெரிய அளவில் பேசும் பொருள் ஆகி பலரும் இப்படி அவர் செய்தது தவறு என கூறினார்கள். பிறகு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீட்டு தனக்கு எதாவது வாய்ப்பு கொடுங்கள் எனவும் கூறியிருந்தார். அதன் பிறகு தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்த மேடை மிகப்பெரிய மேடை இந்த நிகழ்ச்சியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி என சற்று கண்கலங்கி கூல் சுரேஷ் பேசியிருந்தார். ஆனால், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் செல்வதற்கு முன்பு பிக் பாஸ் குறித்து கடுமையாக விமர்சித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் பேசியதாவது ” பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் என்னது ? சிறிய சிறிய பெண்களை அரைகுறை ஆடையில் ஆட வைப்பது தான். காலையில் எழுந்தவுடன் பாட்டு போட்டால் ஜிங் ஜிங் என்று ஆடுவார்கள்” என பேசி இருந்தார். அந்த வீடியோவையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் நடனம் ஆடிய வீடியோவையும் வெளியீட்டு கலாய்த்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்