அப்படி போடு! ‘கோட் ‘படத்தில் அஜித் இருக்காரா? வெங்கட் பிரபு சொன்ன சர்ப்ரைஸ்!

 கோட் படத்தில் அஜித்துடைய ரெபரன்ஸ் காட்சிகள் அல்லது அவர் இருக்கும் காட்சிகள் வரும் என வெங்கட் பிரபு சூசகமாக தெரிவித்துள்ளார். 

GOAT AJITH VIJAY

சென்னை : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன்களும், படத்திற்கான டிக்கெட் புக்கிங்கும் மும்மரமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தில் ஏற்கனவே, விஜயகாந்த், த்ரிஷா எனப் பலரும் இருக்கும் தகவலே ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ்-ஆக இருக்கும் நிலையில், மேலும் ஒரு சர்ப்ரைஸ்-ஆன செய்தியை வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

கோட் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த வெங்கட் பிரபுவிடம் தொகுப்பாளர் கோட் படத்தில் அஜித் விஜய்யுடன் போன் காலில் பேசுவது போலக் காட்சிகள் இடம்பெற்று இருப்பதாகச் சொல்கிறார்கள் உண்மையா? எனக் கேட்டார். அந்த கேள்விக்குச் சிரித்துக்கொண்டே பதில் கூறிய வெங்கட் பிரபு அப்படி எல்லாம் இருக்காது ஆனால், ஒன்று இருக்கிறது.  அது போன் காலில் பேசுவது போல இருக்காது வேறு மாதிரி இருக்கும் அதனை நான் இப்போது சொல்லமாட்டேன்” என சஸ்பென்ஸை வைத்துள்ளார்.

ஏற்கனவே, வெங்கட் பிரபு மங்காத்தா படத்தில் அஜித் பேசும் ‘இனிமேல் குடிக்கவே கூடாது’ என்ற வசனத்தை கோட் படத்தின் டிரைலரில் விஜய் பேசுவது போல வைத்திருப்பார். அது மட்டுமின்றி, வெங்கட் பிரபு அஜித்தைச் சமீபகாலமாக சில முறை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. அதனை வைத்தும், வெங்கட் பிரபு இப்படிப் பேசியதை வைத்தும் பார்க்கையில், கண்டிப்பாகப் படத்தில் அஜித் வருவது அல்லது அஜித் தொடர்பான ரெபரன்ஸ் காட்சிகள் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேலை அஜித்துடைய காட்சி கோட் படத்தில் இடம்பெற்றால் கண்டிப்பாக அஜித் -விஜய் ரசிகர்கள் இணைந்து கோட் படத்தைக் கொண்டாடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருவரும் ஏற்கனவே, ஆரம்ப காலகட்டத்தில் ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்திருந்தார்கள். அந்த படத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. எனவே இருவரும் இணைந்து, மீண்டும் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்பது ரசிகர்களின் கனவாக இருக்கிறது.அந்த கனவு இந்த கோட் படத்தின் மூலம் நிறைவேறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 27032025
o panneerselvam edappadi palanisamy
James Franklin srh 2025
CM MK Stalin
veera dheera sooran issue dhc
Edappadi K. Palaniswami o panneerselvam
shane watson