நடிகை குஷ்பூ பிரபலமான நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் உள்ளார். இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவுகளை பதிவிட்டு வந்தார்.
சமீபத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விமர்சித்து ட்வீட் பதிவிட்டு வந்தார். இதனையடுத்து, குஷ்புவின் ட்விட்டர் கணக்கிலிருந்து 2 நாட்களாக எந்த ட்வீட்டுமே செய்யப்படாமல் இருந்த நிலையில், தனது ட்விட்டர் கணக்கை முடக்க முயற்சி நடந்ததாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், ‘ஒரு நாளுக்கு முன்னதாக, மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து, மூன்று வெவ்வேறு நபர் என்னுடைய கணக்கைத் திறக்க அல்லது ஹேக் செய்ய முயற்சி செய்துள்ளனர் என்று ட்விட்டரிலிருந்து மெசேஜ் வந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக என்னுடைய ட்விட்டர் கணக்கை திறக்கவும் முடியவில்லை அதனுடைய பாஸ்வேர்டை மாற்றவும் முடியவில்லை. இதுதொடர்பாக ட்விட்டர் சார்பில் உதவி ஏதும் கிடைக்கவில்லை.
என்னுடைய கணக்கு முடக்கப்பட்டதாக ட்விட்டரிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன நடைபெறுகிறது என்று எந்த விவரமும் தெரியவில்லை. இந்தப் பிரச்னையை எப்படி தீர்க்க வேண்டும் என்பது குறித்து யாரேனும் தெரிவித்தால் அது பாராட்டத்தக்கதாக இருக்கும். வீட்டில் இருங்கள்.. பாதுக்காப்பாக இருங்கள்.’ என குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …