இலங்கை பெண்ணுடன் நடிகர் சிம்புவுக்கு திருமணமா..? உண்மை தகவல் இதோ..!
நடிகர் சிலம்பரசன் 39 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் என்னவோ அவருடைய திருமணம் குறித்த வதந்தி தகவலும் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் நேற்று கூட ஒரு தகவல் வைரலானது.
அது என்னவென்றால், நடிகர் சிம்பு விரைவில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும், அவருடைய தந்தையும், தாயும் அவருக்கு பொண்ணு பார்த்துள்ளார்கள் என்றும், சிம்புவும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் பரவியது.
இந்த நிலையில், இந்த செய்திக்கு சிம்பு தரப்பு தற்போது விளக்கம் கொடுத்துள்ளது. இது குறித்து பேசிய சிம்புவின் மேனஜர் ” சிம்பு சாருக்கு திருமணம் என பரவுவது முற்றுலும் ஒரு பொய்யான தகவல். அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது என்றால் கண்டிப்பாக மீடியா முன்னிலையில் கூறிவிட்டு தான் திருமணம் செய்து கொள்வார்” என விளக்கம் கொடுத்துள்ளார்.
மேலும் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.