பாஜகவை விமர்சித்தாரா ரன்வீர் சிங்? தேர்தல் களத்தை பதற வைத்த வீடியோ.!
Ranveer Singh: மக்களவைத் தேர்தல் பற்றி நடிகர் ரன்வீர் சிங் பேசியது Al மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என தெரியவந்துள்ளது.
மக்களவை தேர்தலுக்கு மத்தியில், பாலிவுட் நட்சத்திரங்கள் அமீர் கானை தொடர்ந்து ரன்வீர் சிங், பிரதமர் மோடியை விமர்சிப்பது போல் காட்டும் வைரலான டீப்ஃபேக் வீடியோக்கள் பேசும் பொருளாக மாறியுள்ளது.
சமீப காலமாக, சமூக வலைத்தளங்களில் AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், அதுவே இந்த தேர்தல் காலம் வரும்போது இது ஒரு பெரிய பிரச்சனையாகிவிடுகிறது.
அதாவது, சமீபத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நடிகர் ரன்வீர் சிங் பேசுவதுபோல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால், அரசியல் சர்ச்சையில் சிக்கிய ரன்வீர் சிங், தரப்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆம், வைரலாக பரவிய வீடியோவில் இருந்த காட்சிகள் உண்மையாக இருந்தாலும், டீப் ஃபேக் மூலம் குரல் மாற்றம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. அதில், பாஜகவை விமர்சித்து, காங்கிரஸுக்கு ஆதரவாக ரன்வீர் சிங் பேசியது போன்று டீப் ஃபேக் வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த போலி வீடியோ உருவாக்கம் தொடர்பாக ரன்வீர் சிங், காவல்துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து, சைபர் கிரைம் பிரிவு விசாரணைக்காக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
1856
ANALYSIS: FakeFACT: A digitally altered video of actor Ranveer Singh is being circulated, and he can be heard criticizing the BJP government. The fact is that this video has been digitally altered. In the original video, the actor can be heard speaking about (1/2) pic.twitter.com/H88VmfERSb
— D-Intent Data (@dintentdata) April 18, 2024