IPL 2018: டுப்லேசிஸ் மீது மைதானத்தில் காலணி வீச்சு …!இதை செய்தவன் தமிழினத்தின் ஒரு வேறுபாடு…!கொதித்தெழுந்த விஜய் ,அஜித் பட எடிட்டர் …!
மைதானத்தில் ஷூ வீசப்பட்டதை பார்த்த எடிட்டர் ரூபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபாப் டூப்ளசியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், போட்டி நடைபெற்ற மைதானத்தில் காலணிகள் வீசப்பட்டது.
சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் போட்டியை காண வந்த ரசிகர்கள் பல்வேறு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும், சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பார்வையாளர்கள் அமரும் கேலரியில் இருந்து காலணிகள் மற்றும் சட்டை ஆகியவை மைதானத்தின் நடுவே வீசப்பட்டன. கிரிக்கெட் வீரர் ஜடேஜா உள்ளிட்டோர் காலணியை அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து, காலணி விசியதாக, நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் சிஎஸ்கே வீரர் டூப்ளசி அந்த காலணியை எடுத்து வந்து ஓரமாக போட்டார். இந்நிலையில், மைதானத்தில் ஷூ வீசப்பட்டதை பார்த்த எடிட்டர் ரூபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபாப் டூப்ளசியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.அதில் அவர் விருந்தோம்பல் தமிழனின் தலையாய பண்பாடு ,இதை செய்தவன் தமிழினத்தின் ஒரு வேறுபாடு !புரியும்படி சொல்லனும்னா -அவன் வேற ஏதோ ஒரு ப*டு !மன்னிப்புகள் என்று டுப்லேசிஸ் இடம் கேட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.