IPL 2018:இந்த வருட ஐபிஎல்லில் பாலிவுட் நடிகைகளுடன் குத்தாட்டம் போடத்தயராகும் கோலிவுட் நடிகை …!
பதினோறாவது ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது.8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் பஞ்சமில்லாத இந்த திருவிழாவில், இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு களமிறங்குகிறது.
தமன்னாவின் நடனம் ஐபிஎல் தொடக்க விழாவில் இடம்பெறுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கிறது.
ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க பல நடிகர், நடிகைகளையும் இதில் இடம்பெறச் செய்து வருகின்றனர் போட்டியை நடத்துபவர்கள்.
ஷ்ரத்தா கபூர், பரினீதி சோப்ரா, திஷா பதானி, எமி ஜாக்சன், ரிதேஷ் தேஷ்முக், வருண் தவான்,
ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஹிருத்திக் ரோஷண் எனப் பல நடிகர் – நடிகைகள் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர்.
இதில், பிரபுதேவாவுடன் இணைந்து நடனம் ஆட இருக்கிறார் தமன்னா.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.