விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில், லியோ திரைபடம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 148 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து முதல் நாளில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்தாலும் கூட படம் 2.0 வசூல் சாதனையை முறியடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏனென்றால், 2.0 திரைப்படம் தான் தமிழ் படங்களில் இந்தியாவில் மட்டும் அதிகம் வசூல் செய்த படம் என்கிற சாதனையை வைத்துள்ளது.
தலைப்பு சர்ச்சை: சமரசம் வெற்றி…தெலுங்கில் வசூல் சாதனை படைத்த ‘லியோ’ திரைப்படம்!
விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 68 கோடி தான் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல ஹிந்தியிலும் 2.0 வெளியான முதல் நாளில் 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. ஆனால், லியோ திரைப்படம் அதைவிட கம்மியாகதான் வசூல் செய்தது.
ஆனால், உலகம் முழுவதும் என்ற அடிப்படையில் வைத்து பார்த்தால் லியோ திரைப்படம் தான் அதிக வசூல் செய்த தமிழ் படம். ஏனென்றால், வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 148 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 100 கோடி தான் வசூல் செய்திருந்தது.
லியோ படத்தில் நடிக்க யாரெல்லாம் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார்கள் தெரியுமா?
மேலும், லியோ திரைப்படம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்குமா என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் முதல் நாள் வசூலில் ஜெயிலர் படத்தையும் லியோ முந்தியுள்ளது. கோலிவுட் சினிமாவில் வியக்க வைக்கும் வகையில் லியோ படம் வசூல் சாதனை செய்து வருவதால் படம் கண்டிப்பாக 1000 கோடி வசூலா தொட்டால் கூட அதில் ஆச்சர்ய பட ஒன்றும் இல்லை.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…