ரத்தம் தெறிக்க KFG-ல் மிரட்டும் சியான்! ‘தங்கலான்’ படத்தின் மிரட்டல் டிரைலர்!

Thangalaan Teaser

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

தங்கலான்

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘தங்கலான்’. இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். பசுபதி, பார்வதி இன்னும் சில பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

டீசர்

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும்  ‘தங்கலான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 26-ஆம் தேதி தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை முன்னிட்டு இந்த திரைப்படத்திற்கான டீசர் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், சில காரணங்களால் காலையிலே அதாவது 11.30 க்கு வெளியாகும் என்ற புதிய அறிவிப்பு வெளியானது. அதன்படி, தற்போது படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

 

டீசர் விமர்சனம் 

டீசரை வைத்து பார்க்கையில் இதுவரை இல்லாத வகையில் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளது தெளிவாக தெரிகிறது. அதைப்போல ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் இடத்தில் தங்கம் அதிகமாக இருக்கிறது அதனை எடுக்கவேண்டும் என்று சிலர் முயற்சி செய்கிறார்கள், அதனை தடுக்க விக்ரம் மற்றும் அந்த பகுதியில் வாழும் மக்கள் முயற்சி செய்கிறார்கள். இதனை மையமாக வைத்து தான் படம் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

வழக்கமாக பா.ரஞ்சித் இயக்கும் படங்கள் எல்லாம் பெரிய அளவில் பேசப்படும் எனவே இந்த ‘தங்கலான்’ படத்தின் டீசரும் சற்று வித்தியாசமான கதைக்களத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள காரணத்தால் கண்டிப்பாக இந்த படமும் கண்டிப்பாக பேசப்படும் படமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்