பொன்னியின் செல்வன் பின்னணி இசையில் மிரட்டும் இசைப்புயல்.! வைரலாகும் வீடியோ.!

Default Image

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தி,விக்ரம் , ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு,சரத்குமார், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ponniyin selvan 3

இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இசைக்கோர்ப்பு பணிகள், எடிட்ங் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கான பின்னணி இசையமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். ஒரு காட்சிக்கு டிரம்ஸ் இசை அமைக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07 03 2025
mitchell santner and ms dhoni
weather update rain
Pamela Bach
SpaceX Starship 8
mk stalin amit shah
Amit Shah tn