மேத்யூ மெக்கோனாஹே : ஹாலிவுட் நடிகரான மேத்யூ மெக்கோனாஹேவை தேனீக்கள் தாக்கியதால் சற்று பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.
பிரபல ஹாலிவுட் நடிகரான மேத்யூ மெக்கோனாஹே நேற்று அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அவரது வலது கண் முற்றிலும் வீங்கி இருக்கும், மேலும் இந்த பதிவில் ‘Bee Swell’ என்று பதிவிட்டிருந்தார் அதாவது தேனிக்கடித்ததால் ஏற்பட்ட வீக்கம் என்று பதிவிட்டிருந்தார். இதை கண்ட அவரது ரசிகர்கள் கமெண்ட்டில் அவரது உடல் நலம் குறித்தும் விசாரித்து வந்தனர்.
இவர் பதிவிட்ட இந்த பதிவிற்கு டிஸ்கவர் சேனலில் ‘மேன் vs வைல்ட்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ‘பியர் கிரில்ஸ்’, ‘ஆமாம்.. சகோதரா நானும் அங்கு சென்றுருக்கிறேன்’ என்று கமெண்ட் செய்திருந்தார். மேலும், அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும், தேனீக்கள் எங்கு எப்படி கொட்டியது என எந்த ஒரு விவரத்தையும் அவர் அதில் பதிவிடவில்லை.
இவர் கடைசியாக 2021-ம் ஆண்டில் சிங்-2 என்ற ஒரு அனிமேட்டட் படத்திற்காக குரல் கொடுத்திருந்தார், அதன்பிறகு தற்போது 3 ஆண்டுகள் ஆகியும் படம் எதுவும் நடிக்காமல் சினிமா துறையில் இருந்து சற்று ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு இப்படி நேர்ந்துள்ளது அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘டல்லாஸ் பையர்ஸ் கிளப்’ எனும் படத்திற்காக சினிமா துறையில் சிறந்த நடிகருக்கான தலைச்சிறந்த விருதான ஆஸ்கர் விருதை வென்றிருந்தார். மேலும், உலகமே வியந்து பார்த்த கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான ‘இன்டர்ஸ்டெலர்’ படத்தின் கதாநாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…