சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.!

Kottukkaali

சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’ படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது.

ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் போட்டியிட, தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் சூரி மற்றும் அன்னா பென்னின் ‘கொட்டுக்காலி’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Kottukkaali
Kottukkaali [image – @Siva_Kartikeyan]
கூழாங்கல் படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய ‘கோட்டுக்காளி’ படத்தில் சூரி மற்றும் அன்னா பென் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன், தனது பேனரான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

முன்னதாக, இந்த திரைப்படம் 74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஃபோரம் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டு 16 பிப்ரவரி 2024 அன்று திரையிடப்பட்டது. இதன் மூலம் இப்படம் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தது. பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்பட முதல் திரைப்படம் இதுவாகும். இதனை தொடர்ந்து டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதால் தொடர்ந்து சர்வதேச அங்கீகாரம் பெற்று வருகிறது.

இதற்கிடையில், கடந்த 2021 ஆம் ஆண்டு, பி.எஸ்.வினோத்ராஜின் முதல் திரைப்படமான கூழாங்கல் திரைப்படம், சர்வதேச ராட்டர்டாம் திரைப்பட விழாவில் (IFFR) புலி விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்