24 ஆண்டுகளை நிறைவு செய்த ‘முதல்வன்’! நடிக்க மறுத்த நடிகர்கள் யாரெல்லாம் தெரியுமா?

mudhalvan

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முதல்வன்’. இந்த திரைப்படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். ரகுவரன், வடிவேலு, லைலா, மணிவண்ணா, கொச்சின் ஹனிஃபா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி தயாரிக்கவும் செய்து இருந்தார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆகி இருந்தது. 100 நாட்களுக்கு மேல் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

நினைச்சு கூட பார்க்க முடியல! மார்பிங் வீடியோவால் வருத்தத்தில் நடிகை ராஷ்மிகா!

இந்த நிலையில், இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 24-ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதே தினத்தில் (நவம்பர் 7) 1999 ஆம் ஆண்டு தான் வெளியானது. படம் வெளியாகி 24-ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில், படம் குறித்து தங்களுடைய காட்சிகள் அனைத்தையும் வெளியீட்டு நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

இதனையடுத்து, இந்த படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு பதிலாக முதலில் பல நடிகர்கள் நடிக்க இருந்தார்கள். அவர்கள் யார் யாரெல்லாம் என்பதை பற்றி பார்க்கலாம் அதன்படி,  முதலில் படத்தின் கதையை இயக்குனர் ஷங்கர் விஜய்யிடம் தான் கூறினார். ஆனால், சிறுவயதிலேயே அரசியல் திரைப்படத்தில் நடித்தால் சரியாக இருக்காது என்று எண்ணி அவர் இந்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டாராம்.

விஜய் நடிக்க மறுத்ததும் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக படத்தின் கதையை நடிகர் ரஜினிகாந்திடம் கூறினாராம். அவரும் அரசியல் படங்களில் நடிக்க  விருப்பமில்லாத காரணத்தினால் நான் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை என்று மறுத்துவிட்டாராம். அதன்பிறகு நடிகர் அஜித்திடம் கூட இந்த படத்தின் கதையை இயக்குனர் ஷங்கர் கூறினாராம். கூறியவுடன் தனக்கு செட் ஆகாது என ஷங்கரிடம் அஜித் கூறிவிட்டாராம்.  அதன் பிறகு தான் இறுதியாக படத்தின் கதையை இயக்குனர் ஷங்கர் அர்ஜுனிடம் கூற அர்ஜுனுக்கு இந்த திரைப்படத்தின் கதை பிடித்த உடன் அவர் சம்மதம்  தெரிவித்துக்கொண்டு இந்த திரைப்படத்தில் நடித்தாராம். படமும் மிகப்பெரிய ஹிட் ஆனது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்