“அந்த படத்துக்கு பதிலா கொட்டுக்காளி, ஆடுஜீவிதம் படங்களை ஆஸ்காருக்கு அனுப்பியிருக்கலாம்”…வசந்த பாலன் கருத்து!

கொட்டுக்காளியோ, உள்ளொழுக்கோ, ஆடு ஜீவிதமோ இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என இயக்குனர் வசந்த பாலன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

vasantha balan

சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது “ஆஸ்கர் விருது” தான். இந்த விருந்தானது, ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, விழாக்களில் பெரிய அளவில், தமிழ் படங்கள் தேர்ந்தெடுக்க படாதது ஆண்டுதோறும் பேசுபொருளாகிவிடும்.

ஒரு சில தமிழ் படங்களுக்கு விருதுகள் கிடைத்தாலும், நாமினேஷனில் இடம்பெற்றாலும், கூட சில நல்ல படங்களுக்கு கிடைப்பதில்லை. இதனாலே, தமிழ் சினிமாவை சேர்ந்த சில இயக்குநர்கள் வெளிப்படையாக முன் வந்து தங்களுடைய கருத்துக்களை, தெரிவித்து விடுவார்கள். அதில்,  அவர்களுடைய ஆதங்கமும் தெரியும்.

அப்படி தான் குறிப்பாக, பருத்தி வீரன் எனும் தரமான படத்தை இயக்கிய அமீரே ஆஸ்கர் விருதில் அரசியல் இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குற்றம்சாட்டி வெளிப்படையாகவே கூறியிருந்தார். இந்த நிலையில், 2025-ம் ஆண்டிற்கான 97-வது ஆஸ்கர் விருதுக்கு, இந்திய சினிமாவில் இருந்து அனுப்பப்படவுள்ள படங்கள் பற்றிய விவரம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது.

அதில், இந்தியா சார்பாக அமீர்கான் தயாரிப்பில் கிரண் ராவ் இயக்கிய ‘லாப்பட்டா லேடிஸ்’ (இந்தி) திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருது பிரிவிற்கு  பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த படம் பொழுதுபோக்குக்காக எடுக்கப்பட்ட படம் எனவும், அந்த படத்துக்கு பதிலாக கொட்டுக்காளி, ஆடுஜீவிதம் உள்ளிட்ட படங்களை இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பியிருக்கலாம் என இயக்குநர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது ” Laapataa ladies இந்தி திரைப்படம் பொழுதுபோக்கு தன்மைக்காகவும் சுவாரஸ்யத்திற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு feel good drama திரைப்படம். ஆனால் அதை விட
கொட்டுக்காளியோ, உள்ளொழுக்கோ, ஆடு ஜீவிதமோ இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்” என கூறியுள்ளார்.

இவருடைய பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில், அதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் சொல்வது சரி தான் எனவும் மற்றொரு பக்கம் நீங்கள் சொல்லும் அனைத்து படங்களையும் ஆஸ்கருக்கு அனுப்பமுடியாது என்பது போலவும் தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்