முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

Inga Naan Thaan Kingu

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.

காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வரும் சந்தானம் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சந்தானம் இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இங்க நான்தான் கிங்கு’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த ‘இங்க நான்தான் கிங்கு’ திரைப்படத்தில் சந்தானத்துடன் பிரியாலயா, லொள்ளு சபா சேசு, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனிஷ்காந்த், லொள்ளு சபா மாறன், பால சரவணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் டிஇமான் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மே 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ள விமர்சனத்தை பற்றி இப்போது பார்க்கலாம்.

படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்ஒருவர் ” கண்டிப்பாக இந்த படம் பிளாக் பஸ்டர் வெற்றியாக அமையும். நகைச்சுவை அருமையாக இருக்கிறது. இந்த கோடையில் செம வெற்றிப்படமாக அமையும்” என கூறியுள்ளார்.

மற்றோருவர் ” படம் முழுக்க காமெடியாக தான் இருக்கிறது. கண்டிப்பாக இந்த படம் சந்தானத்திற்கு வெற்றிப்படமாக அமையும். கண்டிப்பாக குடும்பத்துடன் இந்த படத்தை பாருங்கள் எல்லாருக்கும் பிடிக்கும்” எனவும் பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் ” படம் நன்றாக இருக்கிறது சந்தானம் நடிப்பு அருமையாக இருக்கிறது. படத்தில் வரும் பாடல்கள் கொஞ்சம் சரியில்லாமல் இருக்கிறது. கொஞ்சம் லாஜிக் படத்தில் இல்லை மற்றபடி கண்டிப்பாக படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது” என கூறியுள்ளார்.

மற்றோருவர் ” படம் நகைச்சுவையாக செல்கிறது. படத்தில் சந்தானம் நடிப்பு ரொம்பவே அருமையாக இருக்கிறது. அவர் காமெடி கிங் என்பதை மீண்டும் நிரூபித்தார். தம்பிராமையா முனிஷ்காந்த் மற்றும் விவேக்பிரசன்னா சிறந்த நகைச்சுவை நன்றாக இருந்தது. படம் கோடை கால பொழுதுபோக்கு திரைப்படம்” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation