காமெடி வேற லெவல்! சிரிக்க வைக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ டிரைலர்!
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் ‘இங்க நான் தான் கிங்கு’. இந்த திரைப்படத்தினை இயக்குனர் என்.ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன், முனிஷ்காந்த், அத்துல், மாறன், சேசு, சுவாமிநாதன், கூல் சுரேஷ், மனோபாலா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளர். படத்தை சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரித்து இருக்கிறார். காமெடி கதையம்சமத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த படம் வரும் மே 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரைலரை பார்த்த மக்களுக்கு படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
டிரைலரில் வரும் காமெடி காட்சிகள் மற்றும் டி இமானின் பின்னணி இசை படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. டிரைலரில் நடிகர் சங்கத்தை கட்டிவிட்டு தான் திருமணம் செய்ய நான் விஷால் இல்லை சிங்கிளாகவே இருக்க நான் சிம்பு இல்லை என சந்தானம் பேசும் வசனமும் பெரிய அளவில் மக்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். எனவே, டிரைலர் நன்றாக இருக்கிறது கண்டிப்பாக இந்த படம் ஹிட் ஆகும் என கூறி வருகிறார்கள். இதோ டிரைலர்…