என்னடா ஒரு ஊரே இருக்கு..? ஷாக்கான தளபதி.! சதீஷ் கூறிய தகவல்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது, இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், சதீஸ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிஜோர்ன் சுர்ராவ், வி.டி.வி கணேஷ், அபர்ணா தாஸ், ஷைன் டாம் சாக்கோ, லிலிபுட் ஃபருக்கி, அங்கூர் அஜித் விகல் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது, படத்தில் நடித்த அபர்ணா தாஸ் பிறந்த நாள் அன்று விஜய்யிடம் நடன இய்குனர் சதீஸ் எங்களை ஒரு முறை ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரைடு கூப்பிட்டு போவீர்களா என்று கேட்டுள்ளார்.
அதற்கு விஜய்யும் சம்மதித்து பூஜா ஹெக்டே அபர்ணா தாஸ் சதீஸ் நெல்சன் உள்ளிட்ட பலர் லூட்டி அடித்து கொண்டு காரில் ரைடு செய்தனர். அதற்கான வீடியோவும் வைரலாகியது.
இதனை தொடர்ந்து நடன இயக்குனர் சதீஸ் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் விஜய்யுடன் ரைடு செய்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில் ” நான் விஜய் சாரிடம் என்னை ஒரு முறை காரில் கூப்பிட்டு போகமுடியுமா என்று கோரிக்கையாக கேட்டேன். அபர்ணா பிறந்த நாள் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும் சார் னு சொன்னேன்.அதற்கு விஜய் சாரும் சரி-னு சொல்லிட்டாரு.. சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று சொன்னார்.
நானும் சரி சார் -னு சொன்னேன்.சாப்பிட்டு விட்டு 20 நிமிஷம் கழித்து காரில் விஜய் சார் இருந்தார். என்ன சார்-னு கேட்டேன்..அதாண்டா ரைடு போகணும் னு சொன்ன- னு கேட்டார். முதலில் காரில் 4 பேர் தா இருந்தாங்க..அடுத்ததாக பார்த்தால் ஊரே ஏறி உக்காந்துட்டாங்க.விஜய் சார் பார்த்துவிட்டு என்னடா ஒரு ஆல் தா சொன்ன ஒரு ஊரே இருகாங்க-னு சிரிச்சார்” என கூறியுள்ளார்.
விஜய் Sir கூட Rolls Royce-ல போன Feel இருக்கே.! pic.twitter.com/4lcKfDtl1p
— Kalaignar TV (@kalaignartv_off) April 12, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025