Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் எந்த அளவிற்கு வெற்றியை பெற்றது என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு படம் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக பல கோடிகளை கடந்து சாதனை படைத்தது வருகிறது.
இந்த படத்தில் நடிகர் விஜய் நடித்த வேலு கதாபாத்திரத்தில் வேறு எந்த நடிகராவது நடித்து இருந்தாலும் கூட இந்த அளவிற்கு படம் வந்து இருக்குமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால், அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரமாகவே நடிகர் விஜய் படத்தில் வாழ்ந்து இருப்பார். ஆனால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகர் விஜய்யே இல்லயாம்.
முதன் முதலாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விக்ரமிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். விக்ரம் மற்றும் இயக்குனர் தரணி இருவரும் தூள் படத்தில் ஒன்றாக பணியாற்றி இருந்தார்கள். எனவே, இவர்கள் இருவருக்கும் நல்ல பழக்க வழக்கம் இருந்தது. இதன் காரணமாகவே, கில்லி படத்தில் விக்ரமை நடிக்க வைக்கலாம் என்று இயக்குனர் தரணி திட்டமிட்டு இருந்தாராம்.
ஆனால், தரணி கில்லி படத்தின் ஐடியாவை சொன்ன அந்த நேரத்தில் விக்ரம் வேறு படங்களில் ரொம்பவே பிஸியாக இருந்தாராம். இதன் காரணமாக விக்ரமால் இந்த கில்லி படத்திற்கு சரியான கால்ஷீட் தேதியை கொடுக்க முடியவில்லையாம். இதனால் கில்லி படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். அதன்பிறகு தான் இயக்குனர் தரணி கதையை விஜயிடம் கூறி சம்மதம் வாங்கினாராம்.
அதைப்போலவே, நடிகர் விஜய் இயக்குனர் தரணி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன தூள் படத்தில் விஜய் தான் நடிக்க இருந்தார். ஆனால், அந்த சமயம் விஜய் வேறு படங்களில் பிசியாக இருந்த காரணத்தால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் அந்த படத்தை தவறவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…