அதன் பிறகு தான் திருமணம்! த்ரிஷா எடுத்த அதிர்ச்சி முடிவு!

trisha

சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்தியான தகவல் பரவுவது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை. அந்த வகையில், தற்போது த்ரிஷா தனது திருமணம் குறித்து எடுத்து இருக்கும் முடிவு பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. 40 வயதாகும் த்ரிஷா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

நீண்ட வருடங்களுக்கு முன்பு வருண்மணியன் என்ற தயாரிப்பாளரும் தொழிலதிபருமான இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து திடீரென முறிந்தது. அதன் பிறகு த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகளும் குறைந்தது. பல போராட்டங்களை சந்தித்த த்ரிஷா. பொன்னியின்செல்வன் படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்டரி கொடுத்தார். அதன்பிறகு லியோ படத்திலும் நடித்திருந்தார்.

அடேங்கப்பா! அதர்வா தம்பி ஹீரோவாக நடிக்கும் படத்தின் பட்ஜெட் இவ்வளவா?

தற்போது அஜித்க்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில், அதைப்போல தக்லைஃப் என தெலுங்கில் சிரஞ்சீவி, மலையாளத்தில் மோகன்லால், இந்தியில் சல்மான்கான் என பெரிய பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்து வருகிறார். இதன் மூலம் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் நயன்தாராவை விட்டுவிட்டு அந்த பட்டத்தை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் த்ரிஷா இருக்கிறாராம்.

ஒரு பக்கம் நயன்தாரா சமீபகாலமாக நடிக்கும் படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது. மற்றோரு பக்கம் த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருக்கிறது.  எனவே, லேடி சூப்பர் ஸ்டார் ஆன பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று த்ரிஷா முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்