கண்ணகட்டுது! சூர்யா – ஜோதிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Suriya – Jyothika சினிமாவில் இருக்கும் பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் அடிக்கடி வெளியாவது வழக்கமான ஒன்று. பிரபலங்கள் பலருடைய சம்பளமே நம்மை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அதிலும் சொத்து மதிப்பு குறித்த தகவல் என்றால் சொல்லவா வேண்டும். அந்த வகையில், நம்மில் பலருக்கும் பிடித்த சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து சேர்த்த சொத்து மதிப்பு குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.
read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?
அதன்படி, சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சேர்ந்து 537 கோடி சொத்து சேர்த்து வைத்து இருக்கிறார்களாம். சமீபத்தில் மும்பையில் இவர்கள் இருவரும் 70 கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்கி இருந்தார்களாம். இந்த 537 கோடி சொத்து மதிப்பில் சூர்யா பங்கு 206 கோடி & ஜோதிகா பங்கு 331 கோடி எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்?
மேலும், சூர்யா தற்போது தனது வரவிருக்கும் கங்குவா படத்திற்காக 30 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். சூர்யா சொத்துக்களில் 1.38 கோடி மதிப்புள்ள BMW 7 சீரிஸ், 80 லட்சம் மதிப்புள்ள ஆடி க்யூ7, 60.91 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ், 1.10 கோடி மதிப்புள்ள ஜாகுவார் ஆகியவையும் அடங்கும். மொத்தம் சூர்யா -ஜோதிகா சொத்து மதிப்பு 537 கோடி என்ற தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
READ MORE – எம்மாடி திருமணம் மட்டுமே வேண்டவே வேண்டாம்! அலறும் நடிகை ஆண்ட்ரியா!
இதனை போலவே கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல இயக்குனரான மணிரத்தினத்தின் சொத்து மதிப்பு குறித்த தகவலும் வெளியாகி இருந்தது. மணிரத்தினத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என்றால் கிட்டத்தட்ட 1200 கோடி இருக்குமாம். இந்த சொத்து மதிப்பு அனைத்திற்கும் சரியாக வரி கட்டி சரியாக வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது சூர்யா -ஜோதிகாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.