pushpa 2 [file image]
புஷ்பா 2 : அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் ஓடிடி விற்பனை விலை மற்றும் சேட்டிலைட் விற்பனை விலை குறித்த தகவல் இந்திய சினிமாவையே அதிர வைத்து இருக்கிறது.
இந்திய சினிமாவே காத்து இருக்கும் திரைப்படங்களில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் “புஷ்பா 2” படமும் ஒன்று. இந்த படத்தினை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் 400 கோடிக்கு மேல் செலவு செய்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் ஒரு பக்கம் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் படத்தில் இருந்து பாடல்களையும் படக்குழு வெளியீட்டு கொண்டு இருக்கிறது.
ஏற்கனவே, ‘புஷ்பா புஷ்பா’ என்ற பாடலும், ‘சூடானா’ என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எங்கயோ கொண்டு சென்று இருக்கும் நிலையில், படத்தின் விற்பனையும் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், புஷ்பா 2 படத்தின் ஓடிடி விற்பனை விலை மற்றும் சேட்டிலைட் விற்பனை விலை குறித்த தகவல் வெளியாகி பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புஷ்பா படத்தின் ஓடிடி உரிமையயை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ( Netflix ) நிறுவனம் கிட்டத்தட்ட 250 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறதாம். அதைப்போல, படத்தின் சேட்டிலைட் உரிமையை ஸ்டார் மா (Star Maa) சேனல் 135 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறதாம். படத்தின் பட்ஜெட் 400 கோடி தான். இதனை படம் வெளியாவதற்கு முன்பே விற்பனையில் கிட்டத்தட்ட பட்ஜெட் பணத்தை எடுத்து இருப்பது இந்திய சினிமாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெளியாவதற்கு முன்பே கிட்டத்தட்ட 385 கோடிக்கு விற்கப்பட்டு இருக்கும் நிலையில், படம் வெளியான பிறகு வசூலிலும் ஒரு கலக்கு கலக்கும். எனவே, படத்தை தயாரிக்கும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு பண மழை தான் கொட்டப்போகிறது என்கிறது கோடம்பாக்கம்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…