Daniel Balaji : மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கடைசி ஆசை குறித்த தகவல் தற்போது கிடைத்திருக்கிறது.
பிரபல நடிகரான டேனியல் பாலாஜி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த திரைஉலகிற்கும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து, மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கடைசி ஆசை குறித்த தகவல் கிடைத்து இருக்கிறது. டேனியல் பாலாஜி உயிரோடு இருந்த சமயத்தில் அதாவது நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் இருந்தே படங்களை இயக்கவேண்டும் ஒரு இயக்குனராக ஆகவேண்டும் என்பது தான் கனவாம். ஆரம்பத்தில் இருந்தே அதற்கான வாய்ப்புக்காக தான் டேனியல் பாலாஜி காத்திருந்தாராம்.
ஆனால், படங்களை இயக்க உதவி இயக்குனராக ஆக கூட அவருக்கு அந்த சமயம் வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். எனவே, அவரை சுற்றி இருந்த நண்பர்கள் எல்லாம் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் அதற்கான முகபாவனை உங்களிடம் இருக்கிறது நீங்கள் நடிங்கள் என்று கூறினார்களாம். இப்டில்லாம் சொல்கிறார்களே என்று தான் டேனியல் பாலாஜி நடிப்பில் குதித்தாராம்.
நடிக்கலாம் என்று முடிவு செய்த பிறகு தான் அவருக்கு சித்தி சீரியலில் டேனியல் என்ற காதாபாத்திரத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்ததாம். அந்த கதாபாத்திரத்திற்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க அடுத்ததாக அலைகள் என்ற சீரியலிலும் நடித்தார். பிறகு ஏப்ரல் மாததில் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த படத்திற்கு பிறகு காக்கா காக்கா, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், யென்னை அறிந்தால், வை ராஜா வை, பைரவா, வட சென்னை, பிகில், உள்ளிட்ட படங்களில் நடித்தார். மற்ற நடிகர்களை போல கிடைக்கும் எல்லா படங்களிலும் நடிக்காமல் தன்னுடைய கதாபாத்திரம் எந்த அளவிற்கு பேசப்படுமோ அதே போன்ற கதைகளை மட்டுமே இதுவரை இவர் ததேர்ந்தெடுத்து நடித்து இருக்கிறார்.
இப்படியான பெரிய பெரிய படங்களில் டேனியல் பாலாஜி நடித்தாலும் கூட அவருடைய ஆசை நிறைவேறாமல் அவர் இறந்துவிட்டார். அவருடைய ஆசை 4 படங்களை இயக்கவேண்டும் என்பது தானாம். அந்த 4 படங்களும் பெயர் சொல்லும் அளவிற்கு நல்ல படமாக இருக்கவேண்டும் அந்த 4 படங்களில் இயக்குனர் பெயரில் தன்னுடைய பெயர் வரவேண்டும் என்று தான் ஆசைபட்டாராம். ஆனால், அவருடைய ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. இதனை கேட்ட ரசிகர்கள் அவருடைய ஆசை நிறைவேறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கூறி வருகிறார்கள்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…