பிகில் படத்தில் நடித்ததால் ரஜினி பட வாய்ப்பு மிஸ் ஆயிட்டு! நடிகை இந்துஜா வேதனை!

rajini Indhuja vijay

மேயாத மான் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை இந்துஜா ரவிசந்திரன். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து புதன், பில்லா பாண்டி, மகாமுனி, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். ஆனால், இவருக்கு பெரிய அளவில் ஒரு பெயரை வெளிக்காட்டிய திரைப்படம் என்றால் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் தான்.

பிகில் திரைப்படத்தில் நடிகை இந்துஜா ரவிசந்திரன் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடைய காட்சிகள் படத்தில் சில நிமிடங்கள் வந்தாலும் அவருடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது என்றே சொல்லலாம். இந்த படத்தில் நடித்ததற்கு பிறகு தான் இவருக்கு மூக்குத்தி அம்மன், நானே வருவேன் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

இருந்தாலும், பிகில் திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுத்தாலும் இந்த படத்தில் நடித்து கொண்டிருந்த போது இந்துஜாவுக்கு ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் அவரால் நடிக்க முடியாமல் போய்இருக்கிறது. இதனை இந்துஜாவே பேட்டி ஒன்றில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் பிகில் திரைப்படத்தில் நடித்து கொண்டு இருந்த சமயத்தில் எனக்கு தர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

படத்தின் கதையை சொல்லும் போது ரஜினி சார் கூடவே பயணிக்கும் ஒரு வகையில், அந்த கதாபாத்திரம் இருக்கும் என்று சொன்னார்கள். ரஜினி சார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வருகிறது என்றால் யார் தான் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள்? எனக்கு அப்படி தான் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தவுடன் நான் பிகில்  படக்குழுவிடம் சொன்னேன்.

அதற்கு படக்குழுவினர் வாழ்த்தும் தெரிவித்திருந்தனர். அட்லீசாரிடம் சொன்னேன் அட்லீ அதற்கு நல்லது தான் ஆனால் நம்மளுடைய படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டாய்  என்ன செய்யப் போகிறாய் என்பது கூட கேட்டார்.  எனவே பிகில் படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் என்னால் ரஜினி சார் உடன் நடிக்க முடியாமல் போய்விட்டது.

ரஜினி சார் படத்தில் நடிக்க  முடியாது என்று சொல்வது மிகவும் கஷ்டமான விஷயம் தான் ஆனால் இந்த பிகில் படத்தில் நடித்து வந்த காரணத்தினால் என்னால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது அதே சமயம் இந்த பக்கம் பிகில் திரைப்படம் பெரிய திரைப்படம் எனவே இந்த திரைப்படத்தில் நான் முதலில் நடிக்க கமிட் ஆகி விட்ட காரணத்தினால் இந்த படத்திற்கு என்னால் நோ சொல்ல முடியவில்லை அதனால் அவர் படத்திற்கு சொல்லிவிட்டேன். அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது வருத்தமாக இருந்தது” எனவும் நடிகை இந்துஜா தெரிவித்துள்ளார்.  மேலும், இந்துஜா நடிப்பில் சமீபத்தில் வெளியான பார்க்கிங் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்