நான் வரல என்ன விடுங்க! விஷ்ணு விஷால் இல்லாமல் உருவாகும் இன்று நேற்று நாளை 2!

Published by
பால முருகன்

Indru Netru Naalai 2 : இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாகவும், அதில் விஸ்ணு விஷால் நடிக்கவில்லை எனவும் தகவல்.

இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இன்று நேற்று நாளை. மியா ஜார்ஜ், கருணாகரன், வி. ஜெயபிரகாஷ், பகவதி பெருமாள், அனுபமா குமார், பி.ரவிசங்கர், டி.எம்.கார்த்திக் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழன் ஆதி இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அருமையான ஒரு படத்தை இயக்குனர் ஆர்.ரவிக்குமார் மக்களுக்காக கொடுத்து இருந்தார்.

இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆர்.ரவிக்குமார்  இரண்டாவது பாகத்தை இயக்கவுள்ளாராம். கடைசியாக இவர் அயலான் படத்தை இயக்கி அதில் நடித்து இருந்தார். அந்த திரைப்படம் பெரிய அளவில் மக்களுக்கு மத்தியில் வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக இன்று நேற்று நாளை 2 படத்தை இயக்க ரெடியாகி வருகிறார்.

ஆனால், இந்த இரண்டாவது பாகத்தில் முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த விஷ்ணு விஷால் நடிக்கவில்லையாம். கதையைக்கேட்டுவிட்டு நான் வரல என்ன விடுங்க என்று விலகி விட்டாராம். எனவே, படக்குழு அந்த கதாபாத்திரத்திற்கு எந்த ஹீரோ சரியாக இருப்பார் என யோசித்து வருகிறதாம். கண்டிப்பாக முதல் பாகத்தில் விஷ்ணு விஷால் எவ்வளவு பொருத்தமாக இருந்தாரோ அதைப்போல தான் ஹீரோவை நடிக்க வைக்க முயற்சி செய்வார்கள். விரைவில் யார் நடிப்பார் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…

17 mins ago

“அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை” வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

1 hour ago

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

2 hours ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

3 hours ago

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

4 hours ago

குடை எடுத்துக்கோங்க… இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

5 hours ago