இந்தியன் தாத்தா வாராரு! ஆடியோ லான்ச் பற்றிய அதிரடி அப்டேட்!
Indian 2 : இந்தியன் 2 திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட்டான இந்தியன் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து ஷங்கர் இரண்டாவது பாகத்தையும் எடுத்து வருகிறார். இந்த இரண்டாவது பாகத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், காஜல் அகர்வால், ஆராஷ் ஷா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனமும் ரெட் ஜெயன் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இருந்து ஏற்கனவே டீசர் வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது.
இதனையடுத்து, படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து இருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்கிற தகவல் தற்போது கிடைத்து இருக்கிறது. அதன்படி, வரும் மே 16-ஆம் தேதி பிரமாண்டமாக சென்னையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இசை வெளியீட்டு விழா நடைபெறுவதற்கு முன்பு படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றியும், முதல் பாடல் பற்றியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.