ஆஸ்கர் விருது: இறுதி பட்டியலில் இந்திய குறும்படம்! ‘எமிலியா பெரெஸ்’ படம் 13 பிரிவுகளில் பரிந்துரை!

ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் அதிக பிரிவுகளில் தேர்வாகி ‘Emilia Perez’ என்கிற திரைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.

Academy Awards 2025

அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சாமுவேல் கோல்ட்வின் தியேட்டரில் வழங்கப்படவிருக்கும் 97-வது அகாடமி விருதுகளை கோனன் ஓ பிரையன் தொகுத்து வழங்குவார்.

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பரிந்துரைப் பட்டியலில் படங்கள், நடிக நடிகைகள் என அனைத்து லிஸ்ட்டும் வரிசையாக வெளியிடப்பட்டு வருகிறது. இந்த பரிந்துரைப் பட்டியல்களில் அதிக பிரிவுகளில் “Emilia Pérez” திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் சிறந்த திரைப்படம், இயக்கம், கதாநாயகி, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, சர்வதேச திரைப்படம், பாடல், துணை நடிகை, தழுவப்பட்ட திரைக்கதை, இசையமைப்பு, ஒப்பனை – சிகை அலங்காரம் ஆகிய 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட கங்குவா, Girls Will Be Girls, All We Imagine As Light, ஆடுஜீவிதம், வீர் சாவர்க்கர் படங்களில் எதுவும் தேர்வாகவில்லை. குனீத் மோங்கா கபூர், பிரியங்கா சோப்ரா தயாரித்த ‘அனுஜா’ ஹிந்தி குறும்படம், Live Action Short Film என்கிற பிரிவில் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு அஸ்கரில் இந்தியாவின் The Elephant Whisperers விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.

பரிந்துரைக்கப்பட்ட முழு விவரம் இங்கே பாருங்கள்:

சிறந்த நடிகர் பிரிவு

  1. Adrien Brody – ‘The Brutalist’
  2. Colman Domingo -‘Sing Sing’
  3. Ralph Fiennes – ‘Conclave’
  4. Timothée Chalamet’s – ‘A Complete Unknown’
  5. Sebastian Stan – ‘The Apprentice’

சிறந்த நடிகை பிரிவு

  1. Demi Moore -‘The Substance ‘
  2. Mikey Madison -‘Anora’
  3. Cynthia Erivo -‘Wicked’
  4. Demi Moore – ‘The Substance’
  5. Karla Sofia Gascón – ‘Emilia Perez’
  6. Fernanda Torres – ‘I’m Still Here’

சிறந்த ஒளிப்பதிவுக்காக பரிந்துரை செய்யப்பட்ட படங்கள்

  1. Maria
  2. The Brutalist
  3. Nosferatu
  4. Emilia Perez
  5. Dune 2

சிறந்த இசை

  • The Brutalist
  • Conclave
  • Emilia Perez
  • Wicked
  • The Wild Robot

சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டவை.

  1. Anora
  2. Wicked
  3. Conclave
  4. Emilia Perez
  5. Dune: Part 2
  6. The Brutalist
  7. The Substance
  8. A Complete Unknown
  9. ’m Still Here
  10. Nickel Boys

சிறந்த அனிமேஷன் படங்கள்

  1. Flow
  2. Inside Out 2
  3. The Wild Robot
  4. Memoir of a Snail
  5. Wallace & Gromit: Vengeance Most Fowl

சிறந்த இயக்குனர்

  1. Jacques Audiard – Emilia Pérez
  2. Sean Baker – Anora
  3. Brady Corbet – The Brutalist
  4. Coralie Fargeat -The Substance
  5. James Mangold – A Complete Unknown

சிறந்த தழுவல் திரைக்கதை

  • A Complete Unknown
  • Conclave
  • Emilia Perez
  • Nickel Boys
  • Sing Sing

சிறந்த ஒரிஜினல் கதை

  • Anora
  • The Brutalist
  • A Real Pain
  • Substance
  • September 5

சிறந்த தயாரிப்பு

  • The Brutalist
  • Conclave
  • Dune: Part Two
  • Nosferatu
  • Wicked

சிறந்த ஆடை வடிவமைப்பு

  • A Complete Unknown
  • Conclave
  • Gladiator II
  • Nosferatu
  • Wicked

சிறந்த மேக்கப் மற்றும் சிகை அலங்காரம்

  • A Different Man
  • Emilia Pérez
  • Nosferatu
  • The Substance
  • Wicked

சிறந்த ஓலி

  • A Complete Unknown
  • Dune: Part Two
  • Emilia Pérez
  • Wicked
  • The Wild Robot

சிறந்த காட்சி எப்க்டெஸ்

  • Alien: Romulus
  • Better Man
  • Dune: Part Two
  • Kingdom of the Planet of the Apes
  • Wicked

சிறந்த துணை நடிகர்

  1. Yura Borisov – Anora
  2. Kieran Culkin – A Real Pain
  3. Edward Norton – A Complete Unknown
  4. Guy Pearce – The Brutalist
  5. Jeremy Strong – The Apprentice

சிறந்த துணை நடிகை

  1. Monica Barbaro – A Complete Unknown
  2. Ariana Grande – Wicked
  3. Felicity Jones – The Brutalist
  4. Isabella Rosselini -Conclave
  5. Zoe Saldana – Emilia Perez

அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட படங்கள்

  • Emilia Perez – 13
  • The Brutalist – 10
  • Wicked – 10
  • A Complete Unknown – 8
  • Conclave – 8
  • Anora – 6
  • Dune: Part 2 – 5
  • The Substance – 5
  • Nosferatu – 4

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்