இந்தியன் 2விற்காக ஆந்திராவில் களமிறங்கிய ஷங்கர்! ஷூட்டிங் எப்போ?!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், சித்தார்த், வித்யுத் ஜம்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானிசங்கர் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தை 80 நாளில் முடிக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாம். ஆதலால் முதலில் படத்திற்கு பிரமாண்ட செட் அமைத்து படமாக்க நினைத்தனர். , தற்போது நேரடியாக களத்தில் இறங்கி ஷூட் செய்ய உள்ளனராம் . இதனால், படக்குழு தற்போது ஆந்திராவில் இடங்களை தேடி அலைந்து வருகிறதாம். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.