8 மொழிகளை கடந்து ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் இந்திய திரைப்படம்.!

drishyam malayalam

Drishyam: இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த ‘த்ரிஷ்யம்’ மலையாளப் படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனால் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றிருக்கிறது.

READ MORE – 19 வயசுலே படுக்கைக்கு கூப்பிட்டாங்க! பாலிவுட் நடிகை வேதனை!

தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் ஆகியோர், கடந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், இதனை கொரிய ரீமேக்கை அறிவித்தனர். இப்பொது அவர்களிடம் இருந்து, Gulfstream Pictures மற்றும் JOAT Films உடன் இணைந்து ஹாலிவுட்டில் ரீ மேக் செய்யும் உரிமையை பெற்றுள்ளனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான இப்படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதனால் இது, இந்தியாவின் மற்ற நான்கு இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் இந்திய மொழிகளிலும் மட்டும் இல்லமால், வெளிநாட்டு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

READ MORE – ஜெயிலர் வெற்றிக்கு நான் தான் காரணம்! சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய தமன்னா?

சொல்லப்போனால் இந்த திரைப்படம் 8 மொழிகளை கடந்து இப்பொது ஹாலிவுட்டுக்கு சென்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். அதாவது, மலையாளத்தில் மாபெரும் வரவேற்பை பெற்று, பல விருதுகளை குவித்த ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் முதலில் 2014ம் ஆண்டுகன்னடத்தில் ‘த்ரிஷ்யா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. பின்னர் அதே ஆண்டில், தெலுங்கில் த்ருஷ்யம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

READ MORE – ஜாபர் சாதிக் விவகாரம்: விசாரணைக்கு தயாராக இருக்கிறேன் – சர்ச்சைக்கு அமீர் விளக்கம்.!

இதனை தொடர்ந்து, 2015ம் ஆண்டு தமிழில் பாபநாசம் என்றும், அதே ஆண்டில் ஹிந்தியில் த்ரிஷ்யம் என்று ரீமேக் செயப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படி இந்திய மொழிகளை கடந்த இது 2017ம் ஆண்டு சிங்கள மொழியில் ‘தர்மயுத்தயா’என்றும், 2019ம் ஆண்டு சீன மொழியில் ‘ஷீப் வித்தவுட் எ ஷெப்பர்ட்’ என்றும் ரீமேக் செய்யப்பட்டது.

READ MORE – பணத்திற்காக அந்த விஷயத்தை செய்யும் ஷ்ரத்தா தாஸ்? பயில்வான் சொன்ன சீக்ரெட்!

இதன் மூலம் சீனாவின் மெயின்லேண்டில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தோனேசிய மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமாகவும், கொரிய மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமைகளை பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்